ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று மாலை 04.00 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும்.
இதன்படி இன்று முற்பகல் 11.30 வரையான காலப்பகுதியில் நுவரெலியாவில் 45 சதவீத வாக்குகளும், திருகோணமலையில் 25 சதவீத வாக்குகளும், புத்தளத்தில் 30 சதவீத வாக்குகளும், கேகாலையில் 45 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை இன்று நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பில் 50 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
