GuidePedia


கிரிக்கெட் விளையாட்டு டெஸ்ட் போட்டியில் இருந்து சுருங்கி ஒருநாள் போட்டியாக மாறியது. பின்னர் தற்போது 20 ஓவராக மாறியுள்ளது. 20 ஓவர் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கமே அதிகரித்து காணப்படும். பந்து வீச்சாளர்கள் பாடு திண்டாட்டம்தான். ஆனால், சில நேரத்தில் பந்து வீச்சாளர்களும் சாதனை படைப்பது உண்டு.

அப்படித்தான் இலங்கையில் நடந்த உள்ளூர் போட்டியில் இலங்கை வீரர் வெலகேதரா நான்கு ஒவர்கள் வீசி 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

இலங்கை உள்நாட்டு போட்டியில் தமிழ் யூனியன்- சிங்கள விளையாட்டுக் கழக அணிகள் மோதின. முதலில் விளையாடிய தமிழ் யூனியன் அணி 142 ரன்கள் குவித்தது. பின்னர் சிங்கள விளையாட்டுக் கழக அணி பேட்டிங் செய்தது. 

அப்போது வேகப்பந்து வீச்சாளர் வெலகேதரா மொத்தம் 4 ஓவர்கள் வீசினார். இதில் இரண்டு ஓவரை மெய்டனாக வீசினார். மற்ற இரண்டு ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த 4 ஓவரில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதனால் சிங்கள விளையாட்டுக் கழக அணி 97 ரன்னில் சுருண்டது.

இதற்கு முன் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் மோரிஸ் கடந்த வருடம் இரண்டு ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை வெலகேதரா சமன் செய்துள்ளார்.

34 வயதாகும் வெலகேதரா, இலங்கை அணிக்காக 21 டெஸ்ட், 10 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.



 
Top