GuidePedia

(க.கிஷாந்தன்)
பதுளை ஹல்துமுல்ல பிரதேசத்தில் மண்சரிவு ஒன்று 20.04.2015 அன்று  இடம்பெற்றுள்ளது.

ஐந்து ஏக்கர் இறப்பர் காணிப் பகுதியொன்றே இவ்வாறு மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹல்துமுல்ல தமனியாதென்ன என்னும் இடத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த மண் சரிவு காரணமாக எவ்வித உயிர்ச் சேதங்களோ,  பொருள் சேதங்களோ ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆராய  சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த ஆண்டு ஹல்துமுல்ல மீரியாபெத்த பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







 
Top