GuidePedia


இந்தியன் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் 8வது சீசன் முதல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் அணியுடன் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி, இரவு  8.00 மணிக்கு தொடங்குகிறது. கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014ல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ளது. 2013ல் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, 2010 பைனலில் சென்னை  சூப்பர் கிங்சிடம் தோற்றது. கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியில் யூசுப் பதான், ராபின் உத்தப்பா, மணிஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹசன், அசார்  முமகது, ரஸ்ஸல் ஆகியோர் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் என்பதால் பேட்டிங் வரிசை மிக வலுவாக அமைந்துள்ளது.

 உமேஷ் யாதவ், மார்னி மார்கெல் வேகமும் சுனில் நரைன் சுழலும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. கர்நாடகாவை சேர்ந்த இளம்  அறிமுக சுழல் கே.சி.கரியப்பாவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். பிரபலமாகாத இவர் ரூ.2.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் நைட் ரைடர்சுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணியிலும் கேப்டன் ரோகித், உன்முக்த், ராயுடு, கோரி ஆண் டர்சன், ஆரோன் பிஞ்ச், போலார்டு என்று மிரட்டலான பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர். ஹேசல்வுட், மலிங்கா வேகமும், ஹர்பஜனின் அனுபவ சுழலும் மும்பை  அணிக்கு கை கொடுக்கும் என நம்பலாம். ஒரு அணியில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற முடியும் என்பதால், வீரர்கள் தேர்வு மிகுந்த  முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

மழை குறுக்கீடு இல்லாமல் வானிலை ஒத்துழைத்தால் தொடக்க லீக் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கவுதம் கம்பீர் (கேப்டன்), அசார் முகமது, ஜோகன் போத்தா, கே.சி.கரியப்பா, பியுஷ் சாவ்லா, பேட் கம்மின்ஸ், ஆதித்யா அகர்வால், பிராட் ஹாக், ஷெல்டன் ஜாக்சன்,  குல்தீப் யாதவ், மார்னி மார்கெல், சுனில் நரைன், சுமித் நார்வால், மணிஷ் பாண்டே, யூசுப் பதான், வீர் பிரதாப் சிங், வைபவ் ராவல், ஆந்த்ரே ரஸ்ஸல், ஷாகிப்  அல் ஹசன், ரியான் டென் டஸ்சேட், ராபின் உத்தப்பா, சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ்.
மும்பை இந்தியன்ஸ்:  

ரோகித் ஷர்மா (கேப்டன்), கோரி ஆண்டர்சன், எய்டன் பிளிசார்டு, ஜஸ்பிரித் பூம்ரா, உன்முக்த் சந்த், மெர்சன்ட் டி லாங்கே, ஆரோன் பிஞ்ச், ஷ்ரேயாஸ் கோபால்,  ஹர்பஜன் சிங், ஜோஷ் ஹேசல்வுட், சித்தேஷ் லாட், மிட்செல் மெக்லநாகன், லசித் மலிங்கா, அபிமன்யு மிதுன், பிரக்யான் ஓஜா, ஹர்திக் பாண்டியா, பார்திவ் பட்டேல்,  கெய்ரன் போலார்டு, நிதிஷ் ராணா, அம்பதி ராயுடு, லெண்டில் சிம்மன்ஸ், ஜெகதீஷா சுசித், பவான் சுயல், ஆதித்யா தாரே, வினய் குமார், அக்ஷய் வாகரே.



 
Top