கென்யா போராளி குழுவான அல்-சபாப் நடத்திய தாக்குதலில் 100 மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இத்துயரமான சம்பவத்தினை தொடர்ந்து கென்யாவில் மூன்று நாட்களுக்கு துக்கத்தினம் அனுஷ்டிக்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை கென்யா கரிஸ்ஸா பல்கலைக்கழகத்தில் அல்-சபாப் போராளி குழுவால் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் அதிகமான மாணவர்கள் உட்பட 148 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல் சம்பவம் காரணமாக கென்யாவில் நடைபெறவிருக்கும் ஈஸ்டர் விழாக்களில் 148 பேர் உயிரிழந்ததை நினைவுகூறும் முகமாக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கென்யா ஜனாதிபதி Uhuru Kenyatta ‘ இத்தாக்குதல் சம்பவமானது மிகக்கொடுமையானது என்றும் இதற்கு தகுந்த பதிலடியை நாம் போராளிகளுக்கு கொடுப்போம்’ என தெரிவித்திருந்தார்.
பலியானவர்ளில் 54 பேர்களை நைரோபி வைத்தியசாலையில் வைத்து அவர்களது உறவினர்களால் அடையாம் கணாப்பட்டுள்ளதாக கென்யா செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
