GuidePedia

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பவர் பிரபல இந்தி நடிகர் பரேஷ் ராவல். “Oh My God!” திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவதாக ராவல் இந்த படத்தை தயாரிக்கிறார். இன்னும் அந்த படத்திற்கு பெயர் வைக்கப்படாத நிலையில், தேசிய விருது பெற்ற இந்தி நடிகர் பரேஷ் ராவல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-
வரும் ஆகஸ்டு மாதத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடியை பற்றிய வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை படம்பிடிக்க இருக்கிறேன். பிரதமர் மோடியை போன்ற ஒரு பெரிய தலைவரின் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் பொறுப்பு வாய்ந்தது. நான் அவ்வாறு நடிக்க இருப்பது பிரதமர் மோடிக்கு தெரியும். இந்த படத்தை எடுக்கும் முன் நான் நிறைய விஷயங்களை ஆராய வேண்டியிருக்கிறது. ஏனென்றால், நான் அப்படியே அவரை மிமிக் செய்ய முடியாது. சர்தார் படத்தில் நான் எப்படி சர்தார் படேலின் கதாபாத்திரத்தை வடித்திருந்தேனோ அதேபோல இந்த படத்தை எடுக்கும் முன் மோடியின் பல போட்டோக்களை பார்க்க வேண்டியுள்ளது. அவரது பேச்சுக்களை கேட்க வேண்டியிருக்கிறது. ஆனால், படத்தில் அவரை அப்படியே காப்பியடித்து நடிக்க மாட்டேன். என்னை பார்த்தால் பிரதமர் மோடியை போல தெரியாது என்பது எனக்கு தெரியும்.
இவ்வாறு நடிகர் பரேஷ் தெரிவித்தார்.
நடிகர் பரேஷ் ராவல் பா.ஜ.க.வை சேர்ந்த அஹமதாபாத் எம்.பி. என்பது நினைவுகூரத்தக்கது.



 
Top