ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தர்.
அரசியல் ரீதியான எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் பிழையாக இருக்கக் கூடுமே தவிர, ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை என அவர் கூறினார்.
தனிப்பட்ட காரணமொன்றுக்காகவே தான் அமெரிக்கா சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
நாளை பிற்பகல் 1.00 மணியளவில் இலங்கைக்கு நாடு திரும்புவதாக பசில் கூறினார்.
இரகசியமான முறையில் நாடு திரும்பவில்லை, நாளை நாடு திரும்பியவுடன் பாராளுமன்ற அமர்வுகளிலும் பங்கேற்க உள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன் அவரை விமான நிலையத்திலேயே கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
