GuidePedia

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடாத்தத் தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஊடகவியலாளர் ஒருவர், ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ளதாக கூறப்படும் விசேட பேச்சுவார்த்தை குறித்து அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
எமக்கிடையில் விசேட பேச்சுவார்த்தை தேவையில்லை. ஏனெனில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ.ல.சு.க.யின் தலைவர். நான் அக்கட்சியின் போஷகர். எமக்கிடையில் பாரிய இடைவெளி கிடையாது எனவும் அதனால் எமக்குள் விசேட பேச்சுவார்த்தை எதுவும் தேவையில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.



 
Top