ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இன்று (20.04.2015) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 27 மற்றும் 38 ம் இலக்க வார்ட்டுகளுக்கு சுமார் ஒரு இலட்சம் பெருமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் Dr. சுபைர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பொருட்கள் வழங்கப்பட்ட இந்நிகழ்வில் ஜமாத்தின் துணை செயலாளர்களான சகோ. முயீன் மற்றும் ரஜப்தீன் ஆகியோருடன் Dr. சுபைர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
பொருட்கள் தேசிய வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் Dr. அனில் ஜயசிங்க அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது - அல்ஹம்து லில்லாஹ்.
-SLTJ ஊடகப் பிரிவு
