மஹிந்த யுகமொன்றை உருவாக்க மக்கள் விரும்புகின்றார்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறந்த மாற்றங்கள் காரணமாகவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை அதிகாரத்திற்கு கொண்டுவர மக்கள் விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால், புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லையென அவர் இதன்போது குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்த ரோஹித அபேகுணவர்தன, அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
