GuidePedia

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னரும் சுமார் 30 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்தவண்ணம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் தினேஸ் குணவர்தன, விமல் வீரவங்ச, பந்துல குணவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதியை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கும் தீர்மானத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதியும் பிரதமர் இந்த விடயம் குறித்து கலந்துரையாடி, சபாநாயகர் ஊடாக எழுத்துமூல வாக்குறுதியை அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த உறுதிமொழி கிடைக்கும் வரை சபையில் இருந்து வெளியேறப்போவதில்லை எனவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.




 
Top