GuidePedia

குறுகிய நோக்கங்களை வைத்துக் கொண்டு இனவாதம் பேசுவதனால் நாட்டுக்கு எந்தவொறு நலவும் ஏற்படப் போவதில்லையென ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
சிங்கள பௌத்த வாதம் பேசிக் கொண்டு உறுவான ஜாதிக ஹெல உறுமய கட்சி தற்பொழுது, அதன் சிங்கள பௌத்த வாத சிந்தனையிலிருந்து விலகிச் செல்வதாக கூறப்படுகின்றது என நேற்றிரவு (7)  நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் அவரிடம் வினவப்பட்டபோதே தேரர் இவ்வாறு கூறினார்.
எமது நாடு அழகானது. இதனை சகலரையும் அரவணைத்துக் கொண்டே அபிவிருத்தி செய்ய வேண்டும். இனவாதம் பேசுவதனால் நாடு அபிவிருத்தியைக் காணாது எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார். 



 
Top