அமெரிக்காவில் மகனின் ஆடிய பல்லை காரில் கட்டி இழுத்த தந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா(Florida) மாகாணத்தில் ராபர்ட் அபெர்குரோம்பி(Robert Ambercrombie) என்ற மல்யுத்த வீரர் வசித்து வருகிறார்.
இவருடைய மகனின் பல் ஒன்று ஆடியபடி இருந்துள்ளது. ஆனால் பல் மருத்துவரிடம் போகாமல் தாங்களாகவே அதை அகற்ற தந்தையும், மகனும் முடிவு செய்தனர்.
அதன்படி ஆடிக்கொண்டிருந்த பல்லை நூலால் கட்டி, அதை காரின் பின்பகுதியுடன் இணைத்த ராபர்ட் காரை வேகமாக செலுத்தியுள்ளார்.
அப்போது அவரது மகனின் பல் பிடிங்கிக்கொண்டு வந்து விட்டது. இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்து இணையத்தில் ராபர்ட் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய ஒரே பயம் என்னவென்றால், என் மகன் சாலையில் விழுந்து அவனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுவிடுமோ? என்பது தான் என மிக சாதரணமாக கூறியுள்ளார்.
தற்போது இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருவதாக கூறப்படுகிறது.
