மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த யானையால் இரண்டு முறை புரட்டியெடுக்கப்பட்ட நபர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அம்மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த வியாழனன்று மூன்று யானைகள் புகுந்தன. அவற்றை விரட்ட கிராம மக்கள் முயன்றனர்.
ஆனால் ஊரை விட்டு வெளியேறாமல் அங்குள்ள வயலுக்குள் நுழைந்தது யானை கூட்டம் அப்போது தனது வயலில் நின்று கொண்டிருந்த ராய்முல் ஷெய்க் என்பவரை யானை ஒன்று இரு முறை புரட்டியெடுத்தது. முதல் முறை அவரை முட்டித்தள்ளிய யானை, 2வது முறை வேகமாக முட்டி தள்ளியது.
இதில் உடல் முழுவதும் சேற்றில் நனைந்தபடி பல அடி தூரம் பறந்து சென்ற ராய்முல், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தாக்குதலுக்கு உள்ளானது குறித்து ராய்முல் கூறுகையில், யானைக்கு அருகே ஆபத்தான நிலையில் நான் எப்படி நின்றேன் என என்னால் உணரமுடியவில்லை.
என்ன நடந்தது என்று தெரியாத நிலையில், என்னை தாக்க முயன்றது யானை. ஒரு முறை அல்ல. இரு முறை என்னை முட்டி தள்ளியது. எனினும் கடவுளின் கருணையால் எப்படியோ நான் உயிர் தப்பினேன் என்றார் ராய்முல்.
வீடியோவில் ராய்முல்லை யானை இரண்டு முறை முட்டி தள்ளுவது தெளிவாக தெரியும் நிலையில், தாக்குதலுக்கு பின் சாவகாசமாக அவர் நடந்து செல்வது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
- See more at: http://www.manithan.com/news/20150418114740#sthash.N5qouvRk.dpuf
