ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறி வைத்து, சவுதி கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதல்கள் முடிவுக்கு வந்துள்ளன.
ஏமன் மீது தாக்குதல்
அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் கரம் கோர்த்தனர்.

இந்த படைகளை எதிர்த்து சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மாதம் 26–ந் தேதி முதல் வான்தாக்குதல்களை நடத்தி வந்தன.
944 பேர் உயிரிழப்பு
இந்த தாக்குதல்களில் இதுவரை 944 பேர் கொல்லப்பட்டனர். 3,487 பேர் படுகாயம் அடைந்தனர். 1½ லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்.
இந்த தாக்குதல்களில் இதுவரை 944 பேர் கொல்லப்பட்டனர். 3,487 பேர் படுகாயம் அடைந்தனர். 1½ லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்.
இந்த தாக்குதல்களினால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வந்தது.
அதிபர் வேண்டுகோளால் நிறுத்தம்
இந்த நிலையில் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று சவுதி அரேபியாவிடம் அதிபர் மன்சூர் ஹாதி கேட்டுக்கொண்டார். அதன்பேரில் 4 வாரங்களாக நடைபெற்று வந்த தாக்குதல்கள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று சவுதி அரேபியாவிடம் அதிபர் மன்சூர் ஹாதி கேட்டுக்கொண்டார். அதன்பேரில் 4 வாரங்களாக நடைபெற்று வந்த தாக்குதல்கள் முடிவுக்கு வந்துள்ளன.
இது தொடர்பாக சவுதி கூட்டுப்படைகளின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அகமது அல் அசிரி, ரியாத்தில் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ஏமன் அரசு மற்றும் அந்த நாட்டின் அதிபர் மன்சூர் ஹாதி வேண்டுகோளின்படி, ஏமனில் நடத்தி வந்த தாக்குதல்களை கூட்டுப்படைகள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளன’’ என்றார்.
கடற்படை முற்றுகை தொடரும்
மேலும் அவர் கூறுகையில், ‘‘ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும்’’ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும்’’ என்றார்.
சவுதி கூட்டுப்படைகள் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ஏமனில் அடுத்து அரசியல் செயல்பாடுகள் தொடர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
சவுதி பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘சவுதி அரேபியா மற்றும் அண்டை நாடுகளின் பாதுகாப்பின் மீது இருந்த அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதை வெற்றிகரமாக அகற்றி விட்டோம். இந்த தாக்குதல்களின் போது, முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே ஆதரவு படையினர் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ராணுவ நிலைகளில் இருந்தும், முகாம்களிலிருந்தும் கைப்பற்றி வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள், ஏவுகணைகள் அழிக்கப்பட்டன’’ என கூறப்பட்டுள்ளது.