லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டங்களை தடை செய்து நேற்று வழங்கிய நீதிமன்ற உத்தரவை இன்று மீறிச் செயற்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஊர்வலத்தில் கலந்துகொண்ட பலர் தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட முன்னர் நீதிமன்றத் தடை உத்தரவு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் ஊடகப் பேச்சாளர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.
