GuidePedia


ஏமனில் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19–ந் தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் எதிர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதமும் பெருமளவில் ஏற்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஏமன் நாட்டில் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினருக்கெதிராக சவுதி அரசு நடத்திய வான் வெளித் தாக்குதலினால், டாலே பகுதியில் 31 ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் தயிஸ் நகரில் 10 ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் போர் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களினால் 85 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



 
Top