GuidePedia

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் புதுவேட்டக்குடி கிராமம் வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் வயது 37. இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வந்த தென்னை மரக்கன்றை வாங்கி தனது வீட்டில் வளர்த்து வந்தார்.
இந்த மரம் நடப்பட்டு 5 ஆண்டு கழிந்த நிலையில், 5 அடி உயரம் வளர்ந்த்து, 5 மாதங்களுக்கு முன்பு தென்னை மரம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குலைகள் தள்ளியது. அந்த தேங்காய்கள் சிறிய அளவிலேயே இளநீராகவும், தேங்காயாகவும் உருமாறின. இளநீர்- தேங்காய்கள் இந்த தென்னை மரத்தில் சிறிய அளவாக இருந்தாலும் அதன் மட்டை குறைவாகவும், ஓடுஅதிகமாவும் உள்ளது. இந்த இளநீரில் 250 மில்லி குறைவில்லாமல் தண்ணீர் உள்ளது குறிபிடத்தக்கது.



 
Top