GuidePedia

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரான ஜலலாபாத்தில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 100 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வங்கி ஒன்றுக்கு அருகாமையிலேயே இந்தக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நங்கஹார் மாகாணத்தின் பொலிஸ் தலைமை அதிகாரி பைசல் அஹமட் தெரிவித்ததுடன், மோட்டார் சைக்கிள் வந்த தற்கொலை குண்டுதாரியே குண்டை வெடிக்க வைத்ததாகவும் குறிப்பிட்டார்.
அரசாங்க ஊழியர்களும், இராணுவ வீரர்களும் தமது சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நியூ காபுல் வங்கியில் வரிசையில் நின்றபோதே தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.



 
Top