GuidePedia

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ எதிர்வரும் 24ம் திகதி வாக்கு மூலமொன்றை அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினரிடம் வாக்கு மூலமொன்றை அளிக்க உள்ளார். பசில் ராஜபக்ஸவின் சட்டத்தரணி உதய ரொஹான் டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து வியட்நாமிற்கு தப்பிச் சென்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைக்காக கடந்த ஜனவரி மாதம் முதல் அமெரிக்காவில் பசில் ராஜபக்ஸ தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக பசில் ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



 
Top