GuidePedia

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தத்தினை நிறைவேற்றாது தடுக்க மீண்டும் சதித்திட்டம் தீட்டப்படுகிறது. அடுத்த பாராளுமன்ற அமர்விலும் 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படாது என சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.மக்களை ஏமாற்றும் வேலையினை செய்வதில் மஹிந்த ராஜபக்ஷவை போன்றே ஜனாதிபதி மைத்திரியும் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
தேசிய அரசாங்கத்தில் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதி கொடுத்திருந்த போதிலும் இன்றுவரை அவ் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து 19ஐ நிறைவேற்றாது தடுத்து வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்து எவ்வாறு ஏமாற்றினாரோ அதே வேலையினை இந்த அரசாங்கமமும் செய்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
100 நாட்கள் வேலைத்திட்டத்தில் பிரதானமான காரணியாக குறிப்பிடப்பட்ட 19வது திருத்தச்சட்டத்தினை இவர்கள் நிறைவேற்றாவிடின் இந்த அரசாங்கம் உருவானதில் அர்த்தமற்றதென்றே கூறவேண்டும். அதேபோல் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19 ஆவது திருத்தச்சட்டம் அடுத்த பாராளுமன்ற அமர்வில் நிறைவேற்றப்படுவதில் சந்தேகமே. ஏனெனில் இப்போதும் 19ஐ தடுக்கும் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசிகள் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் குழப்பத்தினை ஏற்படுத்தி 19வது திருத்தச் சட்டத்தினை தடுக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாகவே செயற்படுத்தப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் 19 ஆவத திருத்தம் அடுத்த பாராளுமன்ற அமர்வில் நிறைவேற்றப்படுவதில் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக தலையிட்டேனும் 19ஆவது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றுவதில் முயற்சிக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் உறுவாகியது மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதார சுமைகளை குறைக்கவும் என்பதையும் தாண்டி நள்ளாட்சியினை உறுவாக்கவும் என்பதை மறந்து விடக்கூடாது எனவும் அவர் தொிவித்தார்.



 
Top