GuidePedia

சிங்கள இனவாத சக்திகள் 19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாக பேராசிரியர் குமுது குசும் குமார தெரிவித்துள்ளார்.
கொழும்பு இடதுசாரி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள இனவாத சக்திகள் 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை தடுக்க முயற்சிக்கின்றன.
19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் தீர்ப்பினையும் பிழையாக அர்த்தப்படுத்தி மக்களை பிழையாக வழிநடத்தி வருகின்றனர்.
இந்த சிங்கள இனவாத சக்திகளின் பிழையான பிரச்சாரத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.



 
Top