GuidePedia

வங்கதேச அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது.
டாக்காவில் வங்கதேசம்- பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நடந்தது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் அபார சதமடித்து அசத்த 50 ஓவரில் 329 ஓட்டங்கள் எடுத்தது.
இதுவே இந்த அணியின் ஒருநாள் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
330 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சுமாரான தொடக்கம் கண்டது.
சர்பராஸ் அகமட் (24), மொகமது ஹபீஸ் (4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 13-வது ஓவரில் 59/2 என்று ஆனது.
அதன் பிறகு அசார் அலியும், ஹாரிஸ் சோஹைலும் இணைந்து 89 ரன்களை 93 பந்துகளில் 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். அப்போது அசார் அலி, டஸ்கின் அகமதுவிடம் அவுட் ஆனார்.
32-வது ஓவரில் 175/4 என்ற நிலையில் ஃபவாத் ஆலம், மொகமது ரிஸ்வான் இணைந்தனர். இருவரும் இணைந்து 40-வது ஓவர் நடு வரையில் தாக்குப் பிடித்து ஸ்கோரை 217 ஓட்டங்களுக்கு உயர்த்தினர்.
தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய 45.2 ஓவரில் 250 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

முடிவில் வங்கதேச அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




 
Top