GuidePedia

புத்தளம்-அநுராதபுரம் வீதியில் பாரிய மரமொன்றை வெட்டி வீதிக்கு குறுக்காக வீழ்த்தியமையால் அவ்வீதியால் பயணிக்கவேண்டியவர்கள் சுமார் ஒன்றரை மணிநேரமாக காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டதாக தேர்தல்கள் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், விரைந்து செயற்பாட்ட பொலிஸார் அந்த மரத்தை அங்கிருந்து அகற்றி, அவ்வீதியினுடனான போக்குவரத்தை சீர்செய்துள்ளனர்.
புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கு செல்லும் வாக்காளர்களை தடுக்கும் நோக்கிலேயே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்துடன் தொடர்புடைய குழுவினரே இந்த மரத்தை வெட்டி வீழ்த்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.



 
Top