எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தற்போது தேர்தல்கள் செயலகத்திற்கு சென்றுகொண்டிருக்கிறார்.
பொலனறுவையிலிருந்து தற்போது கொழும்பு வந்துள்ள மைத்திரி, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்று, பின்னர் அங்கிருந்து தேர்தல்கள் செயலகம் நோக்கி சென்றுகொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவருடன் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோரும் சென்றுகொண்டிருக்கின்றனர்.
