(எஸ்.அஷ்ரப்கான்)
இலங்கையின் 7 வது ஜனாதிபதித் தேர்தல் இன்று (08) நடைபெறுகிறது. கல்முனை பிரதேசத்தில் கல்முனைக்குடிஇ கல்முனைஇ சாய்ந்தமருதுஇ மாளிகைக்காடு மற்றும் அக்கரைப்பற்றுஇ காத்தான்குடி போன்ற பிரதேசங்களிலும் அதிகமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க செல்கின்றனர்.
இப்பிரதேசங்களில் கடந்த 3 மணித்தியாலங்களுக்குள் அதிகமான வாக்காளர்கள் தமது வாக்குகளை அளித்துள்ளமையை காண முடிகிறது.
கல்முனைக்குடி அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தின் வாக்களிப்பு நிலையத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும்இ கிழக்குமாகாண சபை உறுப்பினருமான தயா கமகேஇ கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் ஆகியோர் சென்று நிலைமைகளை அவனித்தனர்.



