புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் காலை 9.30 இற்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தொடரின் முதல் நிகழ்வாக சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவார் எனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க கூறியுள்ளார்.
சபாநாயகர் நியமனத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமானம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது கூட்டத்தொடரில் நாளை பிற்பகல் வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பான தெளிவூட்டல் இடம்பெறவுள்ளதாகவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.