GuidePedia


ஈராக்கின் கிழக்கு தியாலா மாகாணத்தில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

பாக்தாத்தில் இருந்து வடகிழக்கே 60 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பக்குபா என்ற நகரம். இங்கு மார்க்கெட் பகுதி இருப்பதால் எப்போதும் ஏராளமான பொதுமக்கள் இங்கு திரண்டிருப்பார்கள். 

இந்நிலையில், நேற்று இங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 35 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்த சற்று நேரத்தில் கனான் என்ற கிராமத்தில் நடந்த மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் துடிதுடித்து பலியாகினர். இது தற்கொலைப் படைத் தாக்குதல் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இது ஐ.எஸ். தீவிரவாதிகளின் வேலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.



 
Top