GuidePedia

இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை டிப்போவினால் ( சாலை) புதிய 04 பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை - யாழ்ப்பாணம்- திருகோணமலை - வவுனியா- திருகோணமலை-கொழும்பு மற்றும் திருகோணமலை - வலப்பனை என்பனவே குறித்த நான்கு சேவைகளுமாகும்.

திருகோணமலை - கொழும்பு பஸ் சேவை புல்மோட்டையில் இருந்து இரவு 09.30 மணிக்கு ஆரம்பமாவதுடன் திருகோணமலையிலிருந்து இரவு 11.20 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும். மீண்டும் கொழும்பிலிருந்து மறுநாள் காலை 11.15 க்கு திருகோணமலை நோக்கி புறப்படும். திருகோணமலை - யாழ்ப்பாணம் பஸ் சேவை மூதூர் டிப்போவினால் மேற்கொள்ளப்படுகின்றது. திருகோணமலையிலிருந்து நள்ளிரவு 12 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கியும் யாழ்ப்பாணத்திலிருந்து காலை 09.30 மணிக்கு திருகோணமலை நோக்கியும் புறப்படும்.

திருகோணமலை – வலப்பனை பஸ் சேவை திருகோணமலையிலிருந்து காலை 08.15 மணிக்கும் வலப்பனையிலிருந்து காலை 09.30 மணிக்கும் ஆரம்பமாகும். திருகோணமலை – வவுனியா பஸ் சேவை திருகோணமலையிலிருந்து மாலை 06 மணிக்கும் வவுனியாவிலிருந்து அதிகாலை 05.30 மணிக்கும் பயணத்தை தொடங்கும்.

யுத்தத்திற்கு முன்னர் திருகோணமலை டிப்போவினால் 37 பொதுப் போக்குவரத்து சேவைகள் நடத்தப்பட்டன. யுத்த காலப்பகுதியில் அநேக சேவைகளை நடாத்த முடியாமல் இருந்தது. ஆரம்பத்தில் ஈடுபடுத்திய சேவைகளையே தாம் தற்போது ஆரம்பித்துள்ளது.

புதிய பஸ்கள் கிடைக்கப்பெற்றமையும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமையுமே முக்கிய காரணம்.  தற்போது 30 போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது என இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை டிப்போ முகாமையாளர் விஜித தர்மசேன தெரிவித்தார்.

ஏதிர்வரும் காலங்களில் மேலும் பல பஸ் சேவைகள் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாவும் திருகோணமலை இ.போ.ச. டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.



 
Top