GuidePedia

எதிர்க்கட்சித் தலைவர் பதவி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டால் வீதியில் இறங்கிப் போராடுவோம் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும் தகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கோ கிடையாது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றிற்கு ஆறு கட்சிகள் மட்டுமே தெரிவாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உள்ளிட்ட நான்கு கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளன.
எதிர்க்கட்சியில் எஞ்சியிருப்பது இரண்டு கட்சிகள் மட்டுமே. ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க வேண்டியது எதிர்க்கட்சியின் உறுப்பினரே தவிர ஆளும் கட்சியின் உறுப்பினரல்ல.
இதன்படி, சபாநாயகர் யார் எதிர்க்கட்சித் தலைவர் என தீர்மானிப்பார். எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்யும் உரிமை ஜனாதிபதிக்கு கிடையாது.
ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டால் அதற்கு எதிராக நாம் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவோம் என சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அனுரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.



 
Top