GuidePedia

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்க உள்ளார்.
நாளை 2ம் திகதி பொலனறுவையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக பொலனறுவையில் நடைபெறும் இந்த ஆண்டு நிறைவு நிகழ்வு மற்றும் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் பங்கேற்பார் என வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அண்மையில் எந்தவொரு மேடையும் ஒன்றாக அமர்ந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்காவிற்கும் மஹிந்தவிற்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் மூன்று தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றுவார்களா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் நிகழ்வில் பங்கேற்பதனை உத்தியோகபூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிகழ்வில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



 
Top