(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி பிரதேச மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்து வந்த 24 மணி நேரமும் இயங்கக் கூடிய சகல வசதிகளுடனும் கூடிய மருத்துவ நிலையம் தற்போது 'ஹபீபா மெடிகல் சென்டர்' எனும் நாமத்தில் உதயமாகியுள்ளது.
காத்தான்குடி பிரதான வீதியில் முற்றிலும் நவீனமயப்படுத்தப்பட்ட சூழலில் அமைந்துள்ள ஹபீபா மெடிகல் சென்டர் கடந்த 02.08.2015 அன்று உத்தியோபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேசத்திலுள்ள வைத்திய நிபுணர்கள், உலமாக்கள், நலன் விரும்பிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அன்றைய தினம் சுமார் 250 பேருக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடனடியாகவே மருத்துவ அறிக்கைகள் கையளிக்கப்பட்டதுடன் வைத்திய நிபுணர்கள் மூலமாக மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஹபீபா மெடிகல் சென்டரானது தரமானதும் சினேகபூர்வமானதுமான மருத்து சேவையை பிரதேச மக்களுக்கு வழங்க தன்னை அர்ப்பணித்துள்ளது.
இங்கு 24 மணி நேர வெளி நோயாளர் பார்வையிடும் வசதி, 24 மணி நேர மருந்தக வசதி, விசேட மருத்துவ நிபுணர்களை செனலிங் செய்யும் வசதி, ஆய்வுகூட பரிசோதனை வசதி, ஈ.சி.ஜி மற்றும் ஸ்கேன் வசதி, தொலைபேசி மூலம் முன்கூட்டிய வெளிநோயாளர் பதிவு முறை, மாதாந்த கிளினிக் வசதி, நோயாளர் மருத்துவ அறிக்கை பேணுதல், அவசர வீட்டு மருத்துவ வசதி, காயப் பராமரிப்பு மற்றும் மருந்து கட்டுதல் வசதி ஆகியவற்றுடன் அம்பியூலன்ஸ் வசதியும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை பொது வைத்திய நிபுணர்கள், பொது சத்திர சிகிச்சை நிபுணர்கள், மகப்பேற்று பெண் நோயியல் வைத்தி நிபுணர்கள், எலும்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர்கள், சிறுவர் நல மருத்து நிபுணர்கள், எலும்பு முறிவு, கதிரியக்க, நரம்பியல், தோல் விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகளும் இங்கு வழங்கப்படவுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு 0652248628,0652248631 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.