(எப்.முபாரக்)
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை(31) இரவு இரு வெவ்வேறு இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்டட்ட பேராறு மற்றும் சிவன் கோவிலடிப்பகுதியில் ஒரே நேரத்தில் வீட்டிலுள்ளோர் உறங்கிக்கொண்டிருக்கும் போது வீட்டின் ஓட்டினை கழற்றி வீடுகளுக்குள் புகுந்து முப்பதாயிரம் ரூபாய் பணமும் ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியையும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதே போன்று சிவன் கோவிலடி வீதியில் உள்ள வீடொன்றில் வீட்டுக்குள் புகுந்து மூன்று பவுன் நங்க நகைகளும் இருபதாயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்தாக வீட்டு உரிமையாளரீனால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்துக்கு பொலிஸார் மோம்ப நாய்களைப் பயன்படுத்தி விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். கந்தளாய் பிரதேசத்தில் அண்மைக்காலமாக பல கொள்ளைச் சம்பவங்கள் நடந்தேரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்து. இச் கொள்ளைச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.