GuidePedia

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று நாடாளுமன்றில் கன்னி உரையாற்றும்போது சில உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அவர், நாடாளுமன்றத்தின் சட்டத்திட்டங்களை மீறும் வகையில் ஆயுதங்கள் ஏந்துதல், நாட்டைப் பிளவுபடுத்தல் தொடர்பில் கருத்து வெளியிட்டமையினாலே இந் நிலைமை உருவாகியுள்ளது.
உறுப்பினர்கள் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து கருத்து வெளியிட்ட சந்தர்ப்பத்திலே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியிருந்தார்.
ஆயுதம் ஏந்துதல் குறித்து பேச நிலையியற் கட்டளைகளின் அடிப்படையில் இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் கம்மன்பிலவின் உரையை நிறுத்திக்கொள்ள நேரிட்டது.
குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டு வந்தமை பாராட்டுக்குரியது என உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய, உதய கம்மன்பிலவின் உரையை கட்டுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.



 
Top