தேசிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் நேற்று மாலை இறுதிக்கட்ட சந்திப்பை நடத்தின.
இந்த சந்திப்பு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அதன் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, லக்ஷ்மன் கிரியெல்ல, ஜோன் அமரதுங்க ஆகியோர் பங்கேற்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் அதன் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது தேசிய அரசாங்கத்தின் பொறுப்புக்களை பகிர்ந்து கொள்வது தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
அத்துடன் நாடாளுமன்றத்தில் 106 ஆசனங்களை கொண்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சிக்கு 70 வீதமான அமைச்சுக்களை வழங்க இதன்போது இணங்கிக்கொள்ளப்பட்டதாக அரசாங்க ஆங்கில பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.