(எப்.முபாரக்)
மாத்தளையைச் சேர்ந்த ஒருவருக்கு பணமோசடி செய்த குற்றத்திற்கு திருகோணமலை நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை(1) இரண்டு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தென்ன,மாத்தளை பகுதியைச் சேர்ந்த எஸ்.பி.பி.ரத்நாயக்க வயது(43) என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரதேசத்திலுள்ள கடைகளுக்கு மொத்த விலையில் பொருட்கள் வழங்கி வியாபாரம் செய்து வந்த நிலையில் ஒருவரிடம் பொருட்கள் தருவதாக ஐந்து இலட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் பெற்ற நிலையில் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கு பொருட்கள் வழங்கி மிகுதித் தொகையை பின்பு தருவதாக ஏமாற்றியுள்ளார்.பணஉரிமையாளர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸாரினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில் சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி நான்கு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவினை செலுத்துமாறும் அத்தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் இரண்டு வருடம் சிறைதண்டனை விதித்து நீதிபதி ரி.சரவணராசா உத்தரவிட்டார்.