GuidePedia

(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நகரத்தில் இரண்டு கிளைகளிலும் உள்ள லக் சதொசயிலிருந்து பவானைக்குதவாத நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நாட்டரிசி மற்றும் (7,780 கிலோ) வெள்ளை அரசி, (1250 கிலோ) கௌப்பீ 67 (கிலோ) ஆகியவற்றை அழிக்குமாறு அட்டன் நீதிமன்றத்தின் நீதவான் பிரசாத் லியனகே பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படியைில் 01.09.2015 அன்று மேற்படி நாட்டரிசியையும், வெள்ளை அரிசியையும், கௌப்பீயையும் பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர் பி.கே.எல் வசந்தவினால் அட்டன் குடாகம பகுதியில் வைத்து அழிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அட்டன் நகரத்தில் இரண்டு கிளைகளிலும் உள்ள லக் சதொசயிலிருந்து பவானைக்குதவாத நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார 8 இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி தொகைகளையும், கௌப்பீ தொகைகளையும் பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் 08.07.2015 அன்று பிற்பகல் வேளையில் கைப்பற்றினர்.

மக்கள் வழங்கிய முறைபாட்டையடுத்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பரிசோதனையின் பின் அரிசிகளை இவ்வாறு கைப்பற்றினர்.

அதன் பின் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த பின் அந்த வழக்கு கடந்த 28ம் திகதி நீதவானினால் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, பாவனைக்குதவாத வண்டு, புழுக்கள் அடங்கிய பெருந்தொகையான அரிசி, கௌப்பீ பொதிகளை விற்பனை செய்தமை மற்றும் இறக்குமதி செய்தமை ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்ட அட்டன் நகரிலுள்ள லக் சதொச இரு பிரிவுகளின் முகாமையாளர்களுக்கும், விற்பனை முகாமையாளருக்கும், லக் சதொச பணிப்பாளர் சபைக்கும் 45,000 ரூபா தண்டப் பணம் விதித்து அட்டன் நீதிமன்றத்தின் நீதவான் பிரசாத் லியனகே உத்தரவிட்டார்.

அத்தோடு லக் சதொச பணிப்பாளர் சபைக்கு அட்டன் நீதிமன்ற நீதவான் கடுமையாக எச்சரிக்கை செய்து அரிசி இறக்குமதி செய்யும் போதும் விற்பனை செய்யும் போதும் மக்களுக்கு உகந்த பொருட்களை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.



 
Top