நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி, கட்சி பேதமின்றி அதிரிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற முதலாவது அமர்வில் உரையாற்றிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இவ்வாறு நிதி அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அடுத்த வருடம் முதல் இது அமுலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.