GuidePedia

மெய்யான தேசப்பற்றாளர்கள் தேசிய அரசாங்கத்துடன் இருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் பொன்னான காலமாக அமையும்.
இந்த நாட்டு மக்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்த புரட்சியொன்றை செய்தார்கள்.
ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி அதனை மீளவும் உறுதி செய்திருந்தனர்.
மெய்யாகவே தேசத்தின் மீது பற்றுக் கொண்ட வரும் நல்லாட்சி தேசிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட முடியாது.
அவ்வாறு செய்பவர்கள் மக்களினால் அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள்.
கட்சி தாவுதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் உறுதியளித்தோம்.
அதன் அடிப்படையிலேயே நாம் தனிக் கட்சி அரசாங்கமொன்றை அமைக்காது, தேசிய அரசாங்கத்தை உருவாக்குகின்றோம்.
இந்த நடவடிக்கை நாட்டு மக்களினால் வரவேற்கப்பட்டுள்ளது என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



 
Top