GuidePedia

மூன்று தசாப்த காலத்துக்குப் பிறகு கணவன் – மனைவி இருவரும் ஒரே பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருக்கும் விந்தையும் கடந்த பொதுத் தேர்தலில் இடம்பெற்றிருக்கிறது.
அதன்படி, தயா கமகே மற்றும் அனோமா கமகே தம்பதியினர் எட்டாவது பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாக இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொள்கின்றனர்.
1984 ஆம் ஆண்டிலும் இதுபோன்றதோர் விந்தை நடைபெற்றிருந்தது.
அக்காலத்தில், குண்டசாலை தொகுதியில் போட்டியிட்டிருந்த ஆர்.பி. விஜேசிறியும், ஹாரிஸ்பத்துவையில் போட்டியிட்டிருந்த அவரது மனைவியும் ஒரே பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தனர்.



 
Top