GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நாடாளுமன்றில் முன்வரிசையில் ஆசனமொன்று வழங்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 9.25 மணிக்கு நாடாளுமன்றிற்கு மஹிந்த வருகை தந்திருந்தார்.
முன்வரிசையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால சில்வாவிற்கு அடுத்தபடியாக மஹிந்த ராஜபக்ச அமர்ந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், உறுப்பினராக பதவியை ஏற்றுக்கொள்ளும் ஆவணத்தில் மஹிந்த கையொப்பமிட்டார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றிய போது குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவிற்கு நன்றி பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றில் பணிகளை முன்னெடுக்க வழங்கிய ஒத்துழைப்பிற்கு இவ்வாறு நன்றி பாராட்டியுள்ளார்.



 
Top