GuidePedia


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்றது.

ஆட்ட நேர நிறைவின் போது, இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கட்டுக்களை இழந்து 67  ஓட்டங்களை பெற்றிருந்தது.


இந்த நிலையில், இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டுமானால் இன்றைய ஆட்ட இறுதி தினத்திற்குள் மேலும் 313 ஓட்டங்களைப் பெற வேண்டும்.

முன்னதாக இந்திய அணி தமது முதலாவது இன்னிங்சில் 312 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 274 ஓட்டங்களையும் பெற்றது.

இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் 201 ஓட்டங்களைப் பெற்றது.

மூன்று போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவும் இலங்கையும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்றன.

எனவே, இன்றைய இறுதி தினம் இரண்டு அணிகளுக்கு முக்கிய நாளாக அமையவுள்ளது. 



 
Top