(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் மற்றும் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நஸார் (அல்பா நஸார்) உட்பட அதன் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் 2ம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மானுக்கு ஆதரவளிப்பதாக நேற்று 14 வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி கயா பேக்கரி ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தனர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் 2ம் இலக்கத்தில் போட்டியிடும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் , நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமி அதன் சூறா சபை உறுப்பினர்களான பொறியியலாளர் பழுலுல்ஹக்,ஹாருன் உட்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ,ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.