GuidePedia

பொதுபல சேனாவின் பொதுஜன பெரமுன ஒரு பல் கழட்டப்பட்ட பாம்பு அதற்கு முஸ்லிம்கள் அஞ்சத்தேவையில்லை என கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி குழுத்தலைவரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.
இன்று மாலை முருதலாவ பிரதேசத்தில்  தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் மேலும் கருத்துவெளியிடுகையில் …
அன்று பொதுபல சேனா உற்பட பல கடும் போக்கு அமைப்புகள் வன்முறையை கையில் எடுத்து ஆட்டம் போட்டன அதனை மஹிந்த அரசு கட்டுப்படுத்த தவறியது இன்று நாம் அவர்களை கட்டுப்படுத்தியுள்ளோம்.
ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் சிறுபான்மை மக்களை பாதுகாத்து அரவணைக்கும் கட்சி அதனால் தான் முஸ்லிம்கள் எப்போதும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இனைந்துள்ளனர்.
நான் கடந்த காலங்களில் முஸ்லீம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போதுமுஸ்லிம் மக்களின் வாக்குகளை எதிர்பார்த்து நான் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை .எமக்கு உண்மையை கதைக்க தைரியம் இருக்கவேண்டும் நாம் உண்மையை கதைக்க முடியாத கோழைகளாக இருப்பதில் எதுவித பிரயோசனமும் இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.



 
Top