ஏறாவூர் மிச்நகர் பகுதியில் புகாரி மற்றும் றசூல் என்னும் குண்டர்களால் ஏறாவூர் மிச்நகரில் வைத்து முபாசிர் என்னும் நபர் கடும்தாக்குதலுக்குள்ளாகியுள்ளா ர்.
குறிப்பிட்ட சம்பவத்தில் தெரியவருவதாவது:
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிட்டுள்ள இந்த தருவாயில் வேட்பாளர்கள் அனைவரும் விருப்பு வாக்கு வேட்டையில் ஓடிக்கொண்டிருக்கின்றனர். கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் கட்சி வெல்லவேண்டும் வேட்பாளர்களுடன் கோபதாபங்கள் இருப்போர் கட்சியின் மரச்சின்னத்துக்கு வாக்கினையளியுங்கள் என்று பிரச்சாரம் செய்து கொண்டும் வருகின்றனர்.
அதே நிகழ்வு குறிப்பிட்ட பிரச்சனையிலும் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூரில் களமிறங்கியுள்ள அலிஷாஹிர் மெளலானா ஐக்கிய தேசியக் கட்சி மூலம் தேர்தலில் குதிப்பவர் ஆனால் இம்முறை முதலமைச்சரின் வருகையின் பின்னர் ஏறாவூரில் பெரும் மாற்றம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அனைபரும் ஒன்று பட்டுள்ளனர். இதேவேளை அலிஷாஹிர் மெளலானாவுடன் மனஷ்தாபம் கொண்ட சிலர் கட்சிக்கு வாக்களிக்காமல் விட்டு விடக்கூடாது என்பதற்காக மிச்நகரில் மரச்சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று மக்களுக்கு பணிப்புரை வழங்கிய முபாசிர் என்னும் நபரை மெளலானாவின் குண்டர்கள் என்று கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்த பெண்களின் பர்தாக்களைக் கிளித்து பெண்களைத் தாக்கிய குற்றத்திற்காக சிறைச்சாலை சென்று வந்த இருவர் புகாரி, ரசூல் என்போர் இந்த காடைத் தனத்தைப் புரிந்துள்ளாதாகத் தெரிய வருகிறது.
எனவே இப்படியான காடைத்தனத்துக்கு ஏறாவூரில் களமிறக்கப்பட்டு ள்ள மெளலானா உடந்தையாக இருப்பாராக இருந்தால் மிகமோசமான தோல்வியினைத் தழுவ நேரிடும் என்று ஏறாவூர் இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் ஆரம்பகாலப் போராளிகள் அச்சம் கொள்கின்றனர்.
எனவே அடாவடித்தனம், அசிங்கங்களை கைவிட்டு சிறந்தமுறையிலான அன்புடன் கலந்த தேர்தலினைச் செய்ய தன் வசமுள்ள ஆதர்வாளர்காளுக்கு அலிஷாஹிர் மெளலானா சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 70 வீதமான முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஏற்றுக்கொண்டு ஆதரித்து வருகின்ற இவ்வேளையில் இப்படியான அடாவடி , அட்டூளியங்கள், வெறுக்கத்தக்கவையாக இருக்கிறது என்றும், இதனால் ஏறாவூரில் மெளாலனாவுக்கு வாக்களிக்கவிருந்த மக்கள் தனி மரத்துக்கு மாத்திரம் வாக்களிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் மக்களைச் சமாதானமான முறையில் எடுத்துச் செல்லவேண்டியவர்கள் வெட்டுக்குத்து, அடிதடிக்கு குண்டர்களை வழர்ப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள ,முடியாதது எனவே நாம் மரச்சின்னத்துக்கு மாத்திரம் வாக்களிப்போம் என்று அம்மக்கள் திடமாகக் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது..