இன்னும் சில மணித்தியாலங்களில் புதிய நாடு உருவாக்கப்படும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சில மணித்தியாலங்களில் உங்களுக்காக நாம் புதிய நாடு ஒன்றை உருவாக்க உள்ளோம்.
மைத்திரி – ரணில் இணைப்பில் எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் ஸ்திரமான அரசாங்கமொன்றை அமைப்போம்.
இந்த நாடு புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை நோக்கி நகரும்.
அனைத்து கட்சிகளும் அனைத்து அமைப்புக்களும் புதிய நாடு ஒன்றை நோக்கி நகரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.