மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக்கட்சி பிரதான அமைப்பாளரும் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கலந்துகொள்ளும் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு 10 டவர் மண்டபத்துக்கு முன்பாக இடம்பெறவுள்ளது.
முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து இடம்பெரும் இந்த மாபெரும் இறுதித் தேர்தல் பிரச்சாரக்கூட்டமானது பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வேட்பாளர்களை ஆதரித்து கலந்துகொள்ளும் 146 பெரிய கூட்டமாகும். இது தவிற அவர் பல சிறிய கூட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிய சார்ப்பாக பேட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.