ranil-mujib
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், மஹிந்தவை பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்டர்கள் சிலர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
தமது ஆதரவை உறுதி செய்யும் நோக்கில் தீர்மானம் தொடா்பான ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளதாக முன்னணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
.அத்துடன் மஹிந்தவுக்காக சேகரிக்கும் கையொப்ப மனுவிற்கும் அவர்களில் சிலர் கையொப்பமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.