மஹிந்த ராஜபக்சவுக்கு தான் எப்படியும் பிரதமர் பதவி வழங்கப் போவதில்லையென தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நேற்றைய தினம் இது குறித்து எழுதியிருந்த கடிதத்தில் வேறு ஏழு பேரது பெயர்களை முன் மொழிந்திருந்த நிலையில் அதில் ஆறுபேர் இன்று தமக்கு அவ்வாறு பிரதமர் பதவி தேவையில்லையெனவும் அது மஹிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் எனவும் பதில் கடிதம் எழுதியுள்ளனர்.
எனினும், குறித்த கடிதத்தில் அமைச்சர் பௌசியின் கையெழுத்தில்லையென்பதும் அண்மையில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அவர் தனக்கு பிரதமர் பதவி தரப்பட்டால் அது சர்வதேச சமூகத்தில் இலங்கையின் நற்பெயரை உயர்த்தும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.