GuidePedia

(க.கிஷாந்தன்)
சில நாட்களுக்கு முன்பு தலவாக்கலை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து கொண்டு தொண்டமான் மஹிந்த பக்கமா அல்லது மைத்திரிபால சிரிசேன பக்கமா என கேள்வி எழுப்பினார். ஆனால் நான் இரண்டு பக்கமும் அல்ல மலையக மக்களின் பக்கம் அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை ஆதரித்து 14.08.2015 அன்று தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் மேலும் உரையாற்றுகையில்…

அதை புரியாமல் மக்கள் மத்தியில் தவறான கேள்விகளை எழுப்புவதும் கருத்துகளை கூறுவதும் அவர்கள் தெளிவின்மையை காட்டுகின்றது.

தோட்ட தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் சிறு தோட்ட முதலாளிமார்களாக மாற வேண்டும். 7 பேர்ச் காணி அல்ல. ஒவ்வொருவரும் ஒரு ஏக்கருக்கு சொந்தகாரர்களாக இருக்க வேண்டும் என்பது இ.தொ.காவின கனவு. இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் நிச்சியமாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு வாக்களிப்பார்கள்.

மலையகத்திர் இந்த பொது தேர்தலுக்கு பின்னர் தனிவீடு திட்டம், பல்கலைகழகம் உருவாக்குதல, மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழில் பேட்டை அமைத்தல் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை துரித படுத்துவதாக தெரிவித்தார்.

மலையக மக்களுடைய தேவைகளை நன்கு அறிந்து செயல்ப்பட்டதன் காரணமாகவே இக்கூட்டத்தில் காங்கிரஸில் பற்று உள்ளவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அத்தோடு மக்கள் அனைவரும் நாங்கள் செய்கின்ற பணிகளுக்கு உருத்தாணவர்கள். 
இன்று எத்தனையோ பேர் நாங்கள் பெற்றுக் கொடுத்த வாக்குரிமைகளை பயன்படுத்துவதற்காக தகரங்கள், தீபெட்டிகள், வர்ண பூச்சிகள் ஆகியவற்றை கொடுத்து மக்களை ஏமாற்ற நினைத்தாலும் கூட மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்களே தவிர அதற்கு அடிமையானவர்கள் அல்ல.

மேலும் தேர்தல் முடிந்தவுடன் ஏனைய மலையக அரசியல்வாதிகள் எல்லாம் கொழும்பை நோக்கி சென்று விடுவார்கள். மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் பொழுது அவர்களை காப்பற்ற வர மாட்டார்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரமே இம்மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளின் போது கைகொடுப்பதோடு அவர்களை காப்பற்றக் கூடிய அனைத்து வசதிகளையும் செய்துள்ளது. இதனை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.

எனவே இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடம் நாங்கள் மூவரும் அதிகப்படியான வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படுவதோடு இம்மக்களுடைய அபிவிருத்திகளை செய்வதற்கு தயாராக இருப்பதாக இவர் தெரிவித்தார்.



 
Top